ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் எவரும் நாடகமாட முடியாது !
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் இல்லையென்றால், அது எவ்வாறு உதய கம்மன் பிலவிடம் சென்றது என்றும் இதில்
பாரிய சிக்கல் காணப்படுவதாகவும் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இந்த அறிக்கை எவரது வீடுகளுக்கும் எடுத்துச் சென்று இவ்வாறு நாடகமாடும் அறிக்கை அல்ல. அது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய அறிக்கை.
இதனால்,சம்பந்தப்பட்ட குழுக்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்.
குழுக்களின் இரகசிய தன்மையிலும் அதேபோன்று அந்த குழுக்களின் அறிக்கைகள் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
நேர்மைத்தன்மை தொடர்பிலும் நம்பிக்கை இல்லாதிருக்கலாம்.
இவை அனைத்தையும் நோக்கும் போது, அந்த குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது.
அதனால், சுற்றி இருப்பவர்கள் என்ன தாளம் போட்டாலும் எமக்கு பிரச்சினையில்லை.
அன்று முதல் ஈஸ்டர் ஞயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அதனை வைத்து, ஒரு சதமாயினும் நாம் சம்பாதித்திருந்தால் அதனை வைத்து எந்த சிறப்புரிமைகளையும்
நாம் பெற்றிருந்தால் அதனை ஆதார பூர்வமாக ஒப்புவிக்க வேண்டும்.
நாம் ஒருபோதும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை வைத்து இலாபம் தேடவில்லை.
அதற்கான பதிலைத் தேடுவதே எமது நோக்கமாக இருந்தது.
தற்போது சிலர் உள்ளனர். அவர்கள் இந்த பிரச்சினை தொடர்பில்பதில் தேடுவதற்கு எதிரானவர்கள்.
அவ்வாறு இரு தரப்பினர் காணப்படுகின்றனர்.
ஒரு தரப்பினர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதற்கு நிதி வழங்கியவர்கள் இதற்கு எதிரானவர்கள்.
இதற்கு பதில் கிடைத்தால் இவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிவரும்.
தண்டனை கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இரண்டாவது தரப்பினர் ஈஸ்டர் தாக்குதலை வைத்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர்கள்.
சில சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டவர்கள்.
அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் என அவர்களும் இதற்கு எதிரானவர்கள்.
அந்த வகையில் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பதில் கிடைக்குமானால், ஐந்து வருடங்கள் அதை வைத்து பிழைத்தவர்களுக்கு இப்போது வருமான மார்க்கம் இல்லாமல் போகும்.
அவ்வாறு இந்த இரண்டு தரப்பினருமே ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பதில் தேடுவதற்கு எதிரானவர்கள்.
குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதற்கு அவர்கள் எதிரானவர்கள்.
இந்தப் பிரச்சினையை அடுத்து வரும் அரசாங்கத்திற்கும் கொண்டு செல்ல முடியாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியே ஆட்சிக்கு வந்தது.
அடுத்து வரும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு தீர்வு காணப்படும் என்றபதத்தை உள்ளடக்க முடியாது.
அந்த வகையில் நாம் தற்போதைய ஜனாதிபதியை நம்புகின்றோம். தேசிய மக்கள் சக்தியை நம்புகின்றோம்.
பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரையும் பொலிஸ்மா அதிபரையும் சானி அபேசேகரவையும் நாம் நம்புகின்றோம்.
சாணி ஒருபோதும் அரசியல் செய்தவர் அல்ல.
அவர் இந்த நாட்டில் பெரும் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன்
நிறுத்தியவர்.
அதனால் அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்’ என சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.