பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு 7,38,659 பேர் தகுதி  !

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு 7,38,659 பேர் தகுதி !

பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக,07 இலட்சத்து 59 ஆயிரத்து 210 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின்படி 7இலட்சத்து 38 ஆயிரத்து 659 பேர் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி
பெற்றுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 5 நாட்களுக்கு இடம் பெறவுள்ளன.

அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்களில் இம்மாதம் 30 மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் தபால் வாக்களிப்பு இடம்பெறும்.

அத்துடன் அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதி மற்றும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

மேற்படி திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )