பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
723 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 146 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka