முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலளித்த பிரதமர்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான வாக்குறுதியாகும்” என தெரிவித்துள்ளார்.