தந்தையர் தினத்தில் தந்தைக்கு மகன் கொடுத்த அதிர்ச்சி
வெல்லம்பிட்டிய பகுதியில் நபரொருவர் தனது வீட்டில் அலமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் குறித்த வீட்டினை சோதனைக்குட்படுத்திய போது, முறைப்பாட்டாளரின் மகன் எழுதிய கடிதம் ஒன்று அந்த வீட்டில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கடிதத்தில் “அப்பா, எனக்கு ஒரு நல்ல பெண் கிடைத்துள்ளார். நான் அவருடன் தனியாக வாழபோகிறேன் . அந்த பெண்ணின் வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லை, எனவே எங்கள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் செல்கிறேன்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தந்தையின் முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட பொருட்கள் 10 லட்சம் ரூபாய் பெறுமதியானவை எனவும் அதில் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், தந்தையின் வீட்டில் ஒரு பழைய மெத்தையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களையெல்லாம் ஒரு லொரியில் ஏற்றிச் சென்றமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.