அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும்
அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடவுச்சீட்டு தேவைப்படுகின்றவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் இதனை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் நேற்று (29) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தற்போது கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கான கடவுச் சீட்டு வெற்றுப் புத்தகங்களின் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இது அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இது கட்டம் கட்டமாகவே இலங்கைக்குக் கிடைக்கிறது.
இதனால் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே அத்தியாவசியமான தேவை உடையவர்கள் மாத்திரம் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
மாறாக அனைவரும் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகப் பிரவேசித்து, நிலவுகின்ற நெரிசலில் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.