பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு உதய கம்மன்பில சவால்

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு உதய கம்மன்பில சவால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு, பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த சவாலை விடுத்தார்.

மேலும் அவர், ”புதிய ஆட்சியின் கீழ் பணம் அச்சிடப்படவில்லை எனவும், திறைசேரி முறி விவகாரம் குறித்து மாத்திரமே மத்திய வங்கி கடன் பெறுகிறது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல பொய்களை அவர் கூறுவதை நாம் சுட்டிக்காட்டும்போது அவற்றை மறைப்பதற்கு மற்றுமொரு பொய்யை சொல்லும் நிலை காணப்படுகின்றது.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் அரசாங்கம் கடன் வாங்கியமை தொடர்பில் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுக்கின்றேன்.

அரசாங்க ஊடகங்களை கட்டுப்படுத்துவதுபோல தனியார் ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )