எமது ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது

எமது ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது

வெளிநாட்டு தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும் அத்துடன், இந்த ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது எனவும், நாட்டை மீட்டுவிட்டே திரும்பி பார்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ”வெளிநாட்டு தூதுரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும். அரசியல்வாதிகளே தூதரக சேவைக்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதுவர்கள் மட்டும் அல்ல இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களும் அழைக்கப்படுவார்கள்.

ஏனெனில் அரசியல்வாதிகளின் சகாக்கள்தான் பலர் உள்ளனர். நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவரக்கூடிய நாட்டுக்கு சேவை செய்யக்கூடியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபுத்துவ அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. அதனால்தான் சிலர் மூன்று மாதங்களில், மூன்று வாரங்களில் எல்லாம் ஆட்சி கவிழும் எனக் கூறிக்கொண்டுள்ளனர். அவர்கள் கூறுவது பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )