உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் குறித்த பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், குறித்த பரீட்சைகளை இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீளப் பெறுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )