வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்குங்கள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்குங்கள்

நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் துயரத்தினாலும் அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி, அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை கூட்டுங்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புதிய வானிலை தகவல்களைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.

உலக வங்கியும், ஜப்பானும் இதற்கான தொழிநுட்ப உபகரணங்களை வழங்க தயாராக உள்ளன. எனவே இவற்றை பெற வேண்டும்.

அத்துடன் பயிர் சேதத்தினால் நாட்டின் உணவு கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பயிர் சேதம் குறித்து முறையாக மதிப்பீடு செய்து, குறிப்பிட்ட நிவாரணத்தை உரியவர்களுக்கு வழங்க வேண்டும். புள்ளி விபரங்களை மாற்றாமல் இவற்றை சரியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என தெரிவித்துள்ளார்..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )