கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை, அன்புவழிபுரம் பிரதேசத்தில் 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (03) இரவு சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 8 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka