போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

லங்கா பிரீமியர் லீக் (LPL) பற்றி பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளரை கைது செய்தமை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அமைச்சர் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இவ்வாறு போலியான செய்திகளை பரப்புபவர்களின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )