ஒருசில மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு
மருந்து இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீடு செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த ஒருசில இடையூறுகள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் இடைக்கிடை ஓரிரு மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ,அவ்வாறு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.