அதி சொகுசு பேரூந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து இன்று (18) அதிகாலை A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூந்தில் பயணித்த சாரதி உதவியார் உட்பட, Landmaster சாரதி மற்றும், உதவியாளர் காயம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka