அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.