நெவில் டி சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடத்தல் மற்றும் சட்டவிரோத சிறைப்படுத்தல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.