அபிஷேகப்பிரியன் சிவபெருமான்

அபிஷேகப்பிரியன் சிவபெருமான்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு.

இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அக்கினி நட்சத்திரம் என்பது சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடக்கும் வரையிலான நாட்களைக் குறிக்கும்.

அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும்.

இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர்.

இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது.

இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது.

அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள்.

அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.

இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர்.

இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார்.

சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )