இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை வருகை !
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், நாளை (04) இலங்கைக்கு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டில் புதிய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டுக்கு வருகை தருகின்ற முதலாவது சர்வதேச இராஜதந்திரி இவராவார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும்
அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளை யும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த பேச்சு வார்த்தைகளின்போது இலங்கை இந்திய கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், முக்கிய கவனம் செலுத்தப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இடம்பெறும் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.