இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை வீச்சை அடுத்து இரு தரப்பும் பரஸ்பரம் எச்சரிக்கை !

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை வீச்சை அடுத்து இரு தரப்பும் பரஸ்பரம் எச்சரிக்கை !

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகளை வீசியதற்கு ஈரானுக்கு ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்திருப்பதோடு தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இதனை விடவும் மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது.

ஈரான் வரலாற்றில் இரண்டாவது முறையாக இஸ்ரேல் மீது கடந்த செவ்வாக்கிழமை (01) இரவு நேரடித் தாக்குதலை நடத்தியது.

இதன்போது ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உட்பட 200 ஏவுகணைகளை வீசியதாக ஈரான் கூறியது.

இதனால் இஸ்ரேலிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்ததோடு பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் தமது வான்வெளியை மூடின.

தமது நிலத்தின் மீது 180 ஏவுகணைகள் வீசப்பட்டதாக குறிப்பிட்ட இஸ்ரேல், ஈரானின் கூட்டணியான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக மேலும் கடு
மையாக தாக்குதல்களை நடத்தியது.

தெற்கு பெய்ரூட்டில் நேற்றுக்காலை இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை காசாவில் இருந்து ஹிஸ்புல்லா மீது தீவிரப்படுத்தி உள்ளது.

இதன்மூலம் தனது வடக்கு எல்லையின் பாதுகாப்பை பலப்படுத்த முயல்வதாக அது கூறுகிறது.

இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுத்த நிலையிலேயே கடந்த ஏப்ரலுக்குப்பின்னர் ஈரான் இந்த ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தி இருந்தது.

இது இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் எங்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததோடு அதன் கூறிய பாகங்கள் விழுந்து இருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் மருத்துவ வட்டாரம் தெரிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் ரொக்கெட் பாகம் ஒன்று விழுந்ததில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த நகர ஆளுநர் ஹுஸைன் ஹமயல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

பரஸ்பரம் எச்சரிக்கை ‘ஈரான் இன்று மிகப்பெரியதவறைச் செய்திருக்கிறது.

அதற்கு பதிலடி கொடுக்கப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

‘யார் எம்மைத் தாக்கினாலும் நாம் அவர்களைத் தாக்குவோம்’ என்றும் அவர்
குறிப்பிட்டார்.

ஈரான் ஏவுகணைகளை இடைமறித்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், பழிதீர்க்கப்படும் என்று எச்சரித்தார்.

‘இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் கடுமையாக விலை ஒன்றை கொடுக்க
வேண்டி இருக்கும் என்ற சாதாரண பாடத்தைக் கூட ஈரான் கற்கவில்லை’ என்றார்.

கடந்த வாரம் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்ல கொல்லப்பட்டது அதேபோன்று கடந்த ஜூலையில் டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது.

இது ஈரான் புரட்சிக் காவல் படையின் முதல் தாக்குதல் என்று ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் குழுத் தலைவர் இப்ராஹிம் அஸிஸி தெரிவித்துள்ளார்.

‘இஸ்ரேலின் இராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம்.

இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்’ என்று அவர் மிரட்டல் விடுத்தார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலிய அரசு மேலும் பதிலடிக்கு தூண்டும் வரை நடவடிவக்கை
நிறைவுக்கு வந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

தரைவழி மோதல் லெபனானில் தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்ததாக
இஸ்ரேல் குறிப்பிட்டபோதும் லெபனானுக்குள் ஊடுருவ முயன்ற இஸ்ரேலிய துருப்புகளுடன் கடுமையாகச் சண்டையிட்டதாக ஹிஸ்புல்லா கூறியது.

இதன்போது இரு தரப்புக்கும் இடையே தரை வழியே மோதல் இடம்பெற்றிருப்பது இது முதல் முறையாகும்.

இந்த மோதல்கள் நேற்று லெபனான் நிலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது.

வழக்கமான காலாட்படை மற்றும் கவசப் பிரிவுகள் லெபனானில் தரைவழி நடவடிக்கையில் இணைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் லெபனான்
படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதோடு இதனால் லெபனானில் இதுவரை 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு பல்லாயிரம் பேர் தமது வீடுகளை விட்டு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது நேற்று தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

தெற்கு பெய்ரூட்டில் இருந்து சுமார் 20 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அங்கிருந்து கரும் புகை எழுந்ததாகவும் அங்கிருக்கும் ஏ.எப்.பி.செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது மத்திய பெய்ரூட்டில் வசிக்கும்
யூசப் ஆமிர் என்பவர், ‘இந்தப் போரினால் நான் வீடு மற்றும் உறவினர்களை இழந்திருக்கிறேன்.

அவற்றையெல்லாம் லெபனானுக்காகவும் ஹிஸ்புல்லாவுக்காகவும் தியாம் செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

பெய்ரூட் குடியிருப்பாளரான 27 வயது எலி ஜபூர் ஏ.எப்.பி. செய்தி
நிறுவனத்திடம் கூறும்போது,

‘ஹிஸ்புல்லாவின் அரசியலை நான் எதிர்த்தபோதும், எல்லையை பாதுகாப்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவு வழங்குகிறேன்’ என்றார்.

வடக்கு இஸ்ரேலில் நேற்றுக்காலையில் லெபனானில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளால் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையை ஒட்டி இருக்கும் ஹைபா மற்றும் கலிலி பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை இந்த எச்சரிக்கையை விடுத்தது.

நேற்றுக் காலை வரை லெபனானில் இருந்து 100க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெற்கு லெபனானில் மேலும் 25 கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு புதிய வெளியேற்ற உத்தரவு ஒன்றை நேற்றுபிறப்பித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )