ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்விக்கான காரணங்களை வெளியிட முடியாது
ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்விக்கான சில காரணங்களை வெளியிட முடியாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற ஊடகங்க சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் , “எங்கள் தோல்விக்கான சில காரணங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் மட்டுமே கலந்துரையாடுவோம்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏன் பொதுமக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என்று கேட்ட போது, சரியான நேரத்தில் பிரேமதாச பொது வெளியில் வருவார்.” என தெரிவித்துள்ளார் .