ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீதேஜா தற்போதுவரை சிகிச்சையில் உள்ளார்.

இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இதனையடுத்து, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தநிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டினார். இதற்கு நடிகர் அல்லு அர்ஜூ அவரது தரப்பு கருத்தை முன் வைத்தார்.

இச்சம்பவம் குறித்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆன்லைனில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அல்லு அர்ஜுன்அவர்களின் ரசிகர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதில் “ஆன்லைனிலும் ஆப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையையோ நாட வேண்டாம் என்றும், எப்போதும்போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் ரசிகர்கள் என போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் மற்றவர்களை தவறாக சித்தரித்து பதிவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )