இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் முக்கிய மாற்றங்கள்

இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் முக்கிய மாற்றங்கள்

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன் போது இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான அனுமதி இதன் போது வழங்கப்பட்டது. 

புதிய யாப்பு மாற்றங்களில் முக்கிய விடயமாக தீர்மானங்களின் போது வாக்களிக்கும் உரிமை 147 உறுப்பினர்களில் இருந்து 60 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நிதி முகாமை சார்ந்த விடயங்களில் வெளிப்படைத்தன்மையினை பேணுவதனை உறுதிப்படுத்துவதும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட்ட மற்றைய முக்கிய விடயமாக மாறுகின்றது.

யாப்பு மாற்றங்களுக்கு மேலதிகமாக 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக தேர்தல்கள் குழுவினை நியமிக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டத்தின் போது இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மலானி குணரட்ன தலைமையிலான நான்கு பேர் அடங்கிய தேர்தல் குழு 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக தேர்தல்களை முகாமை செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )