தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எப்படி நீக்குவது?

தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எப்படி நீக்குவது?

பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.

அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் என்ன? இந்த வழிகளை பயன்படுத்தி சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு:

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

மஞ்சள் தூள் மற்றும் பால்:

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் தேவையற்ற முடி வளர்ச்சி தடுக்கப்படும்.

மஞ்சள், உப்பு, எலுமிச்சை சாறு, பால்:

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பால் விட்டு கலந்து கொண்டு தேவையற்ற இடத்தில் உள்ள முடியுள்ள பகுதியில் தடவி 5 நிமிடம் ஸ்க்ரப் செய்து பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.

கஸ்தூரி மஞ்சள் தூள், பால் :

1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளுடன், சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலந்து முடிகளின் மீது பூச வேண்டும். இந்த கலவையை 10 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து விட்டு, பின்பு கழுவினால் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு, அந்த இடமும் பட்டு போல் மென்மையாக மாறும். இதை வாரத்திற்கு 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக் கரு:

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோளமாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின்னர் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்:

ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முடி வளரும் இடங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்ணீரால் நன்கு தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான முடியானது நீங்கும்.

கடலை மாவு, மஞ்சள் தூள், கடுகு எண்ணெய்:

ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதை தேவையற்ற ரோமம் உள்ள இடத்தில் 10 -15 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் , முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை:

சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை பழுப்பு நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.

எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர் சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தயிர் , கடலை மாவு :

தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )