வெள்ளைப்பூண்டு மிளகு சாதம்
வெள்ளைப் பூண்டு, மிளகு இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை. இவை இரண்டையும் சேர்த்து வெள்ளைப்பூண்டு, மிளகு சாதம் எவ்வாறு செய்யலாம் எனப்பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சாதம் – 2 கப்
- வெள்ளைப்பூண்டு (வெட்டியது) – 2 கப்
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- மிளகு – இரண்டு கரண்டி
- சாம்பார் வெங்காயம் (வெட்டியது) – 5
- காய்ந்த மிளகாய் – 2
- சீரகம் – ஒரு கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெள்ளைப்பூண்டு, கடுகு, சீரகம் போன்றவற்றை தட்டி சேர்க்கவும்.
வெள்ளைப்பூண்டு வதங்கும்போது அதில் வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்றவற்றை சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் சாதத்தை சேர்த்து வதக்கவும்.
சாதத்தை இறக்குவதற்கு முன்னர் மிளகை ஒன்றிரண்டாக பொடித்து அதன் மீது தூவி இறக்கினால் ஆரோக்கியமான வெள்ளைப்பூண்டு, மிளகு சாதம் ரெடி.