திருமணம் முடிந்து 12 நாட்களின் பின் மனைவி ஒரு ஆண் என கண்டறிந்த கணவன்
இந்தோனேசியாவில் சமீபத்தில் இடம்பெற்ற திருமணம் ஒன்றின் போது கணவன் திருமணமாகி 12 நாட்களின் பின் தனது மனைவி ஒரு ஆண் என கண்டறிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பான செய்திகள் தற்போது சர்வதேச ஊடகங்கள், உள்நாட்டு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என வைரலாகி வருகின்றது.
26 வயதான கணவர் (ஏகே) தனது மனைவி (ஆதிண்டா) ஒரு பெண் என நினைத்தே திருமணம் செய்துள்ளார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு சமூக ஊடகத்தின் தனது மனைவியுடனான பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் முதன்முதலாக சந்திக்கும் போது கூட ஆதிண்டா தனது முழு முகத்தையும் மறைக்கும் பாரம்பரிய முஸ்லிம் உடையை (பர்தா) அணிந்திருப்பதாக குறித்த கணவர் கூறினார்.
மேலும், ஒரு நாள் கூட அவரை வேறு உடைகளில் கண்டதில்லை உனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அவர் ஆரம்பத்தில் நிகாப் பற்றி கவலைப்படவில்லை, மேலும் இஸ்லாத்தின் மீதான அவளது பக்தியின் அடையாளமாகவே ஏகே கருதியுள்ளார்.
இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 12ஆம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும், ஆதிண்டா தனது புதிய கணவரிடமிருந்து தொடர்ந்து தனது முகத்தை மறைத்து, அவரது கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பழக மறுத்துவிட்டார்.
தொடர்ந்து ஏகேவிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள மாதவிடாய், உடல்நிலை சரியில்லை என கூறி சமாளித்து வந்துள்ளார்.
தொடர்ந்து நாட்கள் கழியவே, மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஏகே, ஆதிண்டாவை பற்றி சற்று தேட ஆரம்பித்துள்ளார்.
அதில், அவருக்கு பெற்றோர் இருப்பது தெரியவந்தது மட்டுமில்லாமல் அவர் ஒரு ஆண் எனவும் கணவர் கண்டறிந்துள்ளார். இதனை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த ஏகே செய்வதறியாது திணறியுள்ளார்.
தொடர்ந்து பொலிஸில் புகார் அளித்ததையடுத்து, ஆதிண்டாவை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளனர் இதில், அவர் தனது ஏகேவின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
ஆதிண்டாவின் குரல் கிட்டதட்ட ஒரு பெண்ணின் குரலை ஒத்து இருப்பதால் இவ்வளவு காலம் அவர் ஒரு பெண்ணாக நடிப்பதற்கு மிகவும் இலகுவாக இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடைய திருமணப் புகைப்படங்களைப் பார்த்தால், ஆதிண்டா ஒரு நிஜப் பெண்ணாகவே தெரிகிறார். மென்மையான குரலும், தொனியும் கொண்டவர் என்பதால், அவர் பெண் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை,” என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சட்டங்களின் படி, அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதால், நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.