கணவரோடு வாழ விருப்பம் இல்லை ; தாலியை கழட்டி வைத்து இளம்பெண் ஓட்டம்
கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று பெண்ணொருவர், தாலியை கழட்டி வைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவமொன்று சேலம் கொண்டலாம்பட்டியில் இடம்பெற்றுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மனைவி கௌசல்யா இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மணிமேகலா என்பவருடன் கௌசல்யா திடீரென மாயமாகியுள்ளார்.
கௌசல்யா வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு தாலி கயிறை கழட்டி கடிதத்துடன் கட்டில் மீது வைத்துவிட்டு மணிமேகலாவுடன் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி பொலிஸில் கௌசல்யாவின் கணவர் தாமோதரன் தனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் மாயமாகிவிட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.