குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை
உலகளாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
வருடாந்த உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வரிசையில் பங்களாதேஷ் முதலாவது இடத்தையும் நேபாளம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதுடன் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன் உலகளாவிய ரீதியில் மிகக் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடாக ஐஸ்லாந்து பதிவாகியுள்ளது. இதில் பின்லாந்து இரண்டாவது இடத்திலும், நோர்வே மூன்றாவது இடத்திலும் இடத்திலும் உள்ளன.