பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

சபாநாயகரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களினதும், இணைந்த சேவைகளின் பணியாளர்களினதும் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மறைமாவட்டத்தின் காணி மற்றும் சொத்துகளுக்கான இணை நிர்வாகி அருட்தந்தை க்ரிஷ்னக டிலான் பெரேரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சகல இனங்கள், மதங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கபபட்டுள்ள மின்னொளி ஊட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

பாராளுமன்ற பணியாளர்கள் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன், பாராளுமன்றப் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவையிலுள்ள பணியாளர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதில் பிள்ளைகளை மகிழ்வூட்டும் வகையில் வேடிக்கை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு முடிவடைந்ததும் கண்கவர் வாணவேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற விசேட திட்டக் குழுவின் நிதி மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் ஏனைய சங்கங்களின் நிதி அனுசரணையின் கீழ் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )