மூடப்படும் காலி கோட்டையின் பழைய நுழைவாயில் !
காலி கோட்டை பழைய நுழைவாயிலின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கோட்டை வாயில் கதவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
குறித்த கதவு தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றிலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை காலி கோட்டைக்குள் நுழைவது மற்றும் வெளியேறுதல் என்பன புதிய கோட்டை வாயில்கள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.