தென் கொரியா விமான விபத்து – 179 பேர் பலி: இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு!

தென் கொரியா விமான விபத்து – 179 பேர் பலி: இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு!

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்கு பறவை மோதல் அல்லது மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )