புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவரது பெயர் இன்று அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தற்போது தனது இரண்டாவது சேவை நீடிப்பில் செயற்பட்டு வரும் நிலையில், அவருக்கு மற்றுமொரு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.

மேலும் , ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )