முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார்

அதன்படி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (30) கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அவரது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்ததுடன் இலங்கையிலுள்ள இந்திய இரங்கல் புத்தகத்திலும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில், டிசம்பர் 26, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது,

அதே நேரத்தில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் டிசம்பர் 30 முதல் ஏழு நாட்கள் துக்கத்தை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )