வருட இறுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வருட இறுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மாதமே இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

அதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 233,087 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதமே அதிகபட்சமாக 218,350 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். 

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை 20,37,960 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )