மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் மாத்தறை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றின் மீது நேற்றிரவு (01) 10.30 அளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது கட்டடத்தினுள் 400-இற்கும் அதிக கைதிகள் இருந்ததாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மாத்தறை மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
CATEGORIES Sri Lanka