தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில்  உள்ளடக்கப்பட்ட 03 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (31) அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின்படி, பரீட்சைகள் ஆணையாளர் அமுல்படுத்துவதற்கான மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

அதாவது

  1. விடைத்தாள்களுக்கான புள்ளிகளை வழங்கும் போது சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கி மதிப்பீடுகளை மேற்கொள்ளவும்.

2 . குறித்த மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குதல்.

3. முதலாவது வினாத்தாளுக்காக பரீட்சையை மீண்டும் நடத்துதல்.

இந்த பரிந்துரைகளில், மிகவும் பொருத்தமான நடவடிக்கையை பின்பற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, ஒவ்வொரு பரிந்துரைகளையும் அமுல்படுத்தும் போது ஏற்படக்கூடிய பொருத்தமான மற்றும் பெருத்தமற்ற தாக்கங்கள் தொடர்பில் இது மிகவும் நியாயமான மற்றும் பொருத்தமான இலக்கம் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும்  இலவச புள்ளிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து பெறுபேறுகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )