ரணில் – நேபாள பிரதமர் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை இன்று (02) பலுவத்தாரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு தெற்காசிய நாடுகளின் பரஸ்பர நலன்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் மையமாக இருந்தது.
நேபாளி காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரான தொழிலதிபர் பினோத் சவுத்ரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஒலியின் நீண்டகால நண்பரான விக்கிரமசிங்க, டிசம்பர் 28ஆம் திகதி தனிப்பட்ட விஜயமாக நேபாளம் சென்றடைந்த நிலையில், இன்று நாடு திரும்பவுள்ளார்.