ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் யானைகளுக்கான கழுத்துப்பட்டி

ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்துடன் யானைகளுக்கான கழுத்துப்பட்டி

காட்டு யானைகளின் வழித்தடங்களை அடையாளம் காண்பதற்காக ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய,யானைகளுக்கான கழுத்துப்பட்டியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, யானைகள் கூட்டமாக நடமாடும் போது, அதில் பிரதான யானைக்கு ஜி.பி.எஸ் கருவியை அணிவிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்காக விமான படையின் ஆளில்லா கமரா ஊடாக உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இந்த ஜி.பி.எஸ் கருவி அடங்கிய கழுத்துப்பட்டி தற்போது யானைகளுக்கு அணிவிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )