டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தை தக்க வைத்த பும்ரா
ஆண்கள் டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று (௦8) வெளியிட்டது.
டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
2ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் மற்றும் 3ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவின் ரபாடா உள்ளனர்.
இந்த வரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் பிடித்துள்ளார்.
இவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.