எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி !
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் பல துறைகள் குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லிஜி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.