Clean Sri Lanka : கொக்கொட்டி சோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது

Clean Sri Lanka : கொக்கொட்டி சோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கொக்கொட்டி சோலை பொதுச் சந்தையானது கடந்த நான்கு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்பட்டு வந்தது கொட்டும் மழையிலும் இன்று Clean Sri Lanka வேலைத்திட்டத்தினுடாக புது வருடத்தை முன்னிட்டு இந்த பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக இன்று மீண்டும் கையளிக்கப்பட்டது

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் Clean Sri Lanka வேலை திட்டத்தினுடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் என்ன கருமைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக இன்று மீண்டும் கையளிக்கப்பட்டது

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு பொதுச் சந்தை வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் இவ்விடயம் சம்பந்தமாக கந்தசாமி பிரபு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்ததை அடுத்து தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் விழா போது தேவையான அத்தியாவசிய பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக இன்று மீண்டும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )