மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை : 11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை : 11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !

மனித உபயோகத்துக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை
விற்பனை செய்த குற்றத்திற்காக 11,261 வர்த்தக நிலையங்களுக்கு, எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,

இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் இவ்வாறு 11,261 வர்த்தக நிலையங்
களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பாரியளவு வர்த்தக நிலையங்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும்
உணவுப் பொருட்களில் காணப்படும் கலவைகள் உணவுப் பொருட்களின் காலாவதி தினம் என்பன கவனத்திற்கொள்ளப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்த நடவடிக்கைகளில் நுகர்வோரின் முழுமையான ஒத்துழைப்பு தமது சங்கத்திற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் களஞ்சிய சாலைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுள்ளார்.

அதேவேளை உணவு பரிமாறுபவர்கள் சுத்தமாக உள்ளார் களா அவர்கள் கையுறைகளை உபயோகிக்கின்றார்களா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )