கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.