பெண் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை !
நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தத் துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
குடும்ப நல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக தற்போது சேவையில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் பல சுகாதார பிரிவுகளில் பதில் கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் குடும்பநல அதிகாரிகளின் சேவை பாரிய பங்கு வகிக்கின்றது. அது ஏனைய அதிகாரிகளின் கடமைகள் போல அல்ல.
ஆகையால் தற்போது நிலவும் குடும்பநல உத்தியோகத்திர்களின் பற்றாக்குறை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சி பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளதாக சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.