கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அண்மையில் கனடாவுக்குப் பயணமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அங்கு கனேடியப் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், குறித்த சந்திப்புகள் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் பேசப்பட்ட இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஒழுங்கமைக்குமாறு கட்சியின் பாராளுமன்றளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன், தூதுவரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )