ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்
ஹிக்கடுவ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த இளைஞன் நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை பொறிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் குறித்த இளைஞன் இது தொடர்பில் குறித்து பொருட்படுத்தாமல் அவ்விடத்தில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது
இந்நிலையில், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.