முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

இந்நிலையில், நேற்று நடந்த கிளாசிக்கல் ஆட்டத்தில்  3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )