இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!
சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கான அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அண்மையில் வெளியிட்டது.
இதன்படி இருபதுக்கு 20 போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 , 27, 29 ஆம் திகதிகளில் பல்லேகலையிலும், ஒருநாள் போட்டிகள் ஒகஸ்ட் முதலாம் 4 ஆம் 7 ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இருபதுக்கு 20 போட்டிகள் ஜூலை 27, 28, 30 ஆம் திகதிகளில் பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் கொழும்பில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஒகஸ்ட் 2 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அதேநேரம் மீதமுள்ள போட்டிகள் முன்னதாக திட்டமிட்டவாறு ஒகஸ்ட் 4 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் சனத் ஜனசூரிய இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
அதேபோன்று இலங்கை டி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க பதவி விலகிய நிலையில் புதிய தலைவர் ஒருவருடனேயே இலங்கை அணி உலக சம்பியனான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகளும் ஜூலை 27, 28
மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் பல்லேகலயில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் பகலிரவு
ஆட்டங்களாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஓகஸ்ட் 2, 4 மற்றும் 7
ஆம் திகதிகளில் நடைபெறும்.