எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை எவ்விதமான முன்னறிவிப்பின்றி மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார்.

குறித்த பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் பற்றி பயணிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, ​​அடிக்கடி ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுதடைதல், பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் தொடர்பாக பயணிகளிடம் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

ஊடகங்களின் துணையின்றி நடத்தப்பட்ட இந்த அறிவிக்கப்படாத ஆய்வுப் பயணம் காரணமாக கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யபட்ட காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )