வாக்குறுதியளித்த மின் கட்டணத்த 33% ஆல் குறையுங்கள்
மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபையும் கூறியது. பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு 20% ஆல் மின்சார கட்டணத்தை குறைத்தது. இதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் தேவை என்கின்றனர்.
எனவே தற்போது இதனை 20% ஆல் குறைப்பதோடு, தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என நேற்று (22) வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் பயணம் தொடர்பில்பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.