இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி உப்பு நாளை நாட்டிற்கு!
இறக்குமதி செய்யப்படவுள்ள உப்புத் தொகையின் முதலாம் தொகுதி நாளை (27) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
அதற்கமைய, முதற்கட்டமாக 4,050 மெற்றிக் டன் உப்பு நாளை மறுதினம் நாட்டுக் கொண்டு வரப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து குறித்த உப்புத் தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.